குழந்தைகளுக்கான நூல்கள்: மகளின் பரிந்துரை

ஜனவரி 17, 2020

எல்லாரும் புத்தக சிபாரிகள் போடுகிறார்கள். குழுந்தைகளுக்கான ஒரு பரிந்துரைப் பட்டியலைப் போடலாமே என்று சில நண்பர்கள் முன்பே கேட்டிருந்தார்கள். நான் மகளைக் கேட்டேன். அவளுக்குப் பிடித்த ஐந்து, பத்து என்று தொடங்கினோம். வளர்ந்து நாற்பதைத் தாண்டிவிட்டது. இவை அனைத்தையும் நான் படிக்கவில்லை. பட்டியல் அவளுடைய தேர்வுதான். அனைத்தும் குழந்தை நூல்களல்ல. ஆனால் குழந்தைகளுக்குமானவை என்று கொள்ளலாம். [அவள் வயது பதினொன்று.]

1 டோட்டோ சான் – சன்னலில் ஒரு சிறுமி – National Book Trust [Totto-Chan: The Little Girl at the Window – Tetsuko Kuroyanagi]
2 மாயி-சான் – தோசி மாருகி – Books for Children [The Fire of Hiroshima – Toshi Maruki]
3 குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி; தமிழில்: வெ. ஸ்ரீராம் – க்ரியா பதிப்பகம் [The Little Prince – Antoine de Saint-Exupéry]
4 பனி மனிதன் – ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம்
5 வெள்ளி நிலம் – ஜெயமோகன் – விகடன்
6 குழந்தைகளும் குட்டிகளும் – ஓ பெரோவ்ஸ்கயா (தமிழில் : ருக்மணி) – Books for Children [Kids and Cubs – Olga Perovskaya]
7 கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் – தமிழில்: பெரியசாமித் தூரன் – தமிழினி பதிப்பகம் [The Call of the Wild – Jack London]
8 ஐம்பேரியற்கை – மாற்கு – தமிழினி பதிப்பகம்
9 தேவமலர் மற்றும் கதைகள் – தேசாந்திரி பதிப்பகம் (தேவமலர் – செல்மா லாகர்லெவ் – க.நா.சு., உயிராசை – ஜாக் லண்டன் – புதுமைப்பித்தன்; மேல்கோட்டு – நிக்கலாய் கோகல் – பாஸ்கரன்; விருந்தாளி – ஆல்பர் காம்யூ – க.நா.சு.) [The Legend of the Christmas Rose – Selma Lagerlöf, Love of Life – Jack London, The Overcoat – Nikolai Gogol, The Guest – Albert Camus]
10 மகாபாரதம் (வியாசர் விருந்து) – ராஜாஜி [Mahabharata – C. Rajagopalachari]
11 இளைஞர்களுக்கான கம்ப ராமாயணம் – சரஸ்வதி ராம்நாத் முன்னுரை – எழுதியவர் பெயர், பதிப்பகம் குறித்துவைக்கவில்லை [Ramayana]
12 நிழல் காட்டும் நிஜங்கள் (திருக்குறள் கதைகள்) – மலர்க்கொடி ராஜேந்திரன் – விஜயா பதிப்பகம்
13 மாயக்கண்ணாடி – உதயசங்கர் – நூல் வனம்
14 கடவுளைப் பார்த்தவனின் கதை – லியோ டால்ஸ்டாய் – தமிழில்: பாலு சத்யா – Books for Children [Leo Tolstoy – can’t identify the original – can someone help?]
15 ஒரு நாயின் கதை – பிரேம் சந்த் – தமிழில்: யூமா வாசுகி- Books for Children [ कुत्ते की कहानी/Story of a Dog – Munshi Premchand]
16 ரஸ்டியின் வீரதீரங்கள் – ரஸ்கின் பாண்ட் – தமிழில்: கே.பாலச்சந்திரன் – National Book Trust [The Adventures of Rusty – Ruskin Bond]
17 சாவித்திரிபாய் பூலே – வழிகாட்டியின் வாழ்க்கைப் பயணம் – தமிழில்: சாலை செல்வம் – அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகப் பதிப்பகம் [Savitri Bai – Journey of a Trailblazer – Azim Premji University Publication]
18 பாப்பாவுக்கு காந்தி – தி.ஜ.ர. – காந்திய இலக்கிய சங்கம்
19 ஐந்து சீன சகோதரர்கள் – Books for Children
20 ஃபெலுடா வரிசை – சத்யஜித் ரே – Books for Children [Feluda Series – Satyajit Ray]: அனுபிஸ் மர்மம், டார்ஜிலிங்கில் ஓர் அபாயம், பம்யாய் கொள்ளையர்கள்,…
21 சிறுவர் நாடோடிக் கதைகள் – வீர வேலுசாமி (பதிப்பாசிரியர்: கி.ரா) – அகரம் பதிப்பகம்
22. பெரிய மரமும் சிறிய புல்லும்: உலக நாடோடிக் கதைகள் – யூமா வாசுகி – Books for Children
23 காட்டிலே கதைகள் – மலையாள மூலம்: சிப்பி பள்ளிபுறம், தமிழில்: எல்.பி.சாமி – Books for Children
24 மாகடிகாரம் – விழியன் – Books for Children
25 Prodigy Series (Kizhakku) – லெனின், அக்பர், அலெக்ஸாண்டர், இலியட், பரமஹம்சர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், அமேசான் காடுகள், மலைகள்…
26 லயன் காமிக்ஸ் : உரைபனி மர்மம் , பெயிரூட்டில் ஜானி, மலைக்கோட்டை மர்மம், ஃளைட் 731, வான்வெளிக்கொள்ளையர்கள்,…
27 தும்பி இதழ்கள்
28 சுப்பாண்டியின் சாகசங்கள்

1. The Adventures of Burratino or the Little Gold Key – Alexei Tolstoy – Raduga Publishers Moscow
2. Black Beauty – Anna Sewell (Abridged)
3. The Call of the Wild – Jack London (Original)
4. Ben Hur – Lew Wallace (Abridged)
5. Alice’s Adventures in Wonderland – Lewis Carroll (Original)
6. The Wonderful Wizard of OZ – L. Frank Baum (Abridged)
7. The Black Arrow – Robert Louis Stevenson (Abridged)
8. 20,000 Leagues Under the Sea – Jules Verne (Abridged)
9. The Last of the Mohicans – James Fenimore Cooper (Abridged)
10. Gulliver’s Travels – Jonathan Swift (Abridged)
11. The Hound of the Baskervilles (Sherlock Holmes) – Sir Arthur Conan Doyle (Abridged)
12. Blue Umbrella – Ruskin Bond
13. Angry River – Ruskin Bond
14. The Magic Finger – Roald Dahl
15. Charlie and the Chocolate Factory – Roald Dahl
16. Charlie and the Great Glass Elevator – Roald Dahl


2017ல் படித்தவை

ஜனவரி 5, 2018

சென்ற வாரம் இரண்டு புத்தகங்கள் பாதி படித்த நிலையில் இருந்தன. எனவே புத்தாண்டை ஒரு வாரம் தள்ளிப்போட்டுவிட்டேன். இன்றுதான் புத்தாண்டு தொடங்கியது. 2017ல் நான் படித்த புத்தகங்களின் பட்டியல் இதோ. ஆண்டு முழுவதுமே காலத்தோடு விளையாடிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

ஆங்கிலத்திலும் தமிழிலும், சிறியதும் பெரியதுமாக, முக்கியமானவையும் முக்கியமற்றவையுமாகப் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். தரம்பால் நூலைத் தவிர வேறு எதற்கும் விரிவான குறிப்புகள் எழுதவில்லை என்பதுதான் பெரிய குறை. சில புத்தகங்களுக்குக் கட்டாயம் எழுதவேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.

புத்தகங்களைக் கோவையிலும், கிராமத்தில் தோட்டத்திலும், மருத்துவமனைகளிலும், திருமண மண்டபங்களிலும், பயணங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் என்று வெவ்வேறு சூழல்களில் படித்தேன். அச்சு வடிவத்திலும், மடிகணினியிலும், கின்டிலிலும், ஐபேடிலும், கைபேசியிலும் என்று பல்வேறு கருவிகளில் படித்தேன் – ஒரே புத்தகத்தை வெவ்வேறு ஊடகங்களில் படித்ததும் நிகழ்ந்தது . ஹர்ஷாவின் ‘நாகநந்தா’ நாடகத்தை பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு, அதே பேருந்துநிறுத்தத்தில் மீண்டும் அமர்ந்து படித்து முடித்துவிட்டுத்தான் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்றேன். ஒரு புத்தகம் பேருந்தில் திருட்டுப் போய்விட்டதாக நினைத்து, போலீசுக்குக் கொடுத்தப் புகார் கடிதத்தில் கூட குறிப்பிட்டுவிட்டேன். ஆனால், அது களவு போகவில்லை. இன்னொரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது, இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால், அவசரமாக, கவனமின்றி இறங்கியதில் இன்னொரு பர்சைப் பறிகொடுத்தேன்.

மனைவியோடும், மகளோடும் சேர்ந்து பல புத்தகங்களும் கதைகளும் படித்தேன். மகள் Gulliver’s Travelsன் சுருங்கிய வடிவம் படிக்கும்போது, கூடவே நான் மூல நூலைப் படித்தது ஒரு புதிய அனுபவம்; சிறு வயதில் படித்த சுருக்கப்பட்ட க்ளாசிக்களையெல்லாம் மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

 

  1. இன்று – அசோகமித்திரன்
  2. சீர்மை – அரவிந்த் க
  3. சின்னு முதல் சின்னு வரை – வண்ணதாசன்
  4. முத்துக்கள் பத்து (சிறுகதைகள்) – சா.கந்தசாமி
  5. 1945ல் இப்படியெல்லாம் இருந்தது – அசோகமித்திரன்
  6. குழந்தைப் பருவத்துக் கதைகள் – கி.ராஜநாராயணன்
  7. கடல்புரத்தில் – வண்ணநிலவன் (மறுவாசிப்பு)
  8. ஒரு நாள் – க.நா.சு.
  9. பறவை வேட்டை – அசோகமித்திரன்
  10. கண்டி வீரன் – ஷோபா சக்தி
  11. அன்புள்ள ஸ்நேகிதிக்கு – லா.ச.ராமாமிருதம்
  12. கொற்றவை – ஜெயமோகன்
  13. எழுதழல் – ஜெயமோகன்
  14. காடு- ஜெயமோகன்
  15. சிலப்பதிகாரம் – உ.வே.சா பதிப்பு, புலியூர் கேசிகன் உரை (மறுவாசிப்பு)
  16. தொல்காப்பியம்: பொருளதிகாரம்
  17. அம்பேத்கரின் கல்விக்கொள்கைகள் – ரவிகுமார்
  18. காந்தியக் கல்வியும் பிற கல்விமுறைகளும் – பங்கஜம்
  19. புகழ் பெற்றி நாவல்கள் – க.நா.சு.
  20. புதுமைப்பித்தன் வரலாறு – தெ.மொ.சி.ரகுநாதன்
  21. இலக்கியத்தின் ரஹசியம் (கட்டுரைகள்) – புதுமைப்பித்தன்
  22. தேவார இசையமைப்பாய்வு – இ.அங்கயற்கண்ணி
  23. சிலப்பதிகார இசைத்தமிழ் – S.ராமநாதன்
  24. நண்பர்கள் நினைவில் பாரதியார் – இலசை மணியன்
  25. உறவினர் நினைவில் பாரதி – இலசை மணியன்
  26. The Bellarosa Connection – Saul Bellow
  27. Happy Days – Samuel Beckett
  28. Henry IV Part 1 – William Shakespeare (மறுவாசிப்பு)
  29. Doctor Zhivago – Boris Pasternak
  30. The Last Temptation – Nikos Kazantzakis
  31. The Blue Umbrella – Ruskin Bond
  32. Death in Venice and other stories – Thomas Mann
  33. The Forged Coupon and other Stories – Leo Tolstoy
  34. What Men Live by and other Stories – Leo Tolstoy
  35. Crime and Punishment – Dostoevsky
  36. Hocus Pocus – Kurt Vonnegut
  37. Across the Black Waters – Mulk Raj Anand
  38. Nagananda – Harsha
  39. Gulliver’s Travels – Jonathan Swift
  40. Poems of Love and War – A.K.Ramanujan
  41. Taking Issue and Allah’s Answer – Iqbal
  42. Four Centuries of American Poetry – Mohan Ramanan
  43. The Waste Land – T.S.Eliot (With great annotations from Norton’s Anthology of English Literature)
  44. The Ruined Cottage – William Wordsworth (From Norton’s)
  45. Don Juan (Canto 1) – Lord Byron (From Norton’s)
  46. C.N.Annadurai – P.C.Ganesan
  47. The Dragons of Eden – Carl Sagan
  48. Essential Writings of Dharampal – Gita Dharampal
  49. Zinky Boys – Svetlana Alexievich
  50. Deschooling Society – Ivan Illich
  51. Gandhi Patel: Letters and Speeches – Differences within Consensus – Neerja Patel
  52. The Charkha and the Rose – Publications Division
  53. My Life is my Message – Sadhana (Part 1) – Narayan Desai
  54. Ram Manohar Lohia – Indumati Kelkar (Translated by Desh Raj Goyal)
  55. Jeevani: Ayurveda for Women – Dr.P.L.T.Girija

 

இவ்வாண்டில் கணிசமான பகுதி படிக்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாத புத்தகங்கள்:

  1. Capital: Volume 1 – Karl Marx
  2. Capital in 21st Century – Thomas Piketty
  3. Sakuntala: Texts, Readings, Histories – Romila Thappar
  4. Collected Stories of Isaac Bashevis Singer
  5. Open Letter on Famine to Lord Curzon – RC Dutt
  6. White Mughuls – William Dalrymple
  7. Iliad – Homer (Translated by Alexander Pope)
  8. Norton’s Anthology of English Literature, The Major Authors
  9. புறநானூறு
  10. ஊரும் பேரும் – ரா.பி.சேதுப்பிள்ளை
  11. இசைத்தமிழ் வரலாறு இரண்டாம் பகுதி — து.ஆ.தனபாண்டியன்
  12. அ.முத்துலிங்கம் கதைகள்
  13. டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி – டெட்ககோ குரோயாநாகி

 

தொடர்புடைய பதிவுகள் :

2016ல் படித்தவை

2015ல் படித்தவை

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


2016ல் படித்தவை

திசெம்பர் 31, 2016

இவ்வாண்டு படிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது என்பது இப்பட்டியலைப் பார்க்கும்போது தெரிகிறது. எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவ்வாண்டுதான் மிகவும் அதிகம் பயணம் செய்திருக்கிறோம்; கிராமக் குழந்தைகளோடு நிறைய நேரம் கழித்திருக்கிறோம்; மகிழ்மலரின் தேவார-திருவாசக இசையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம்; விவசாயம், தேங்காயெண்ணெய் ஆட்டுதல் என்று முற்றிலும் புதிதான பணிகளுக்குள் ஆழமாகச் சென்றிருக்கிறோம்; தோப்பில் ஒரு சிறு அறையினை எங்கள் உடலுழைப்பையும் அளித்துக் கட்டியுள்ளோம். நன்றாக உறங்கியிருக்கிறேன்; ஓரளவு எழுதியுமிருக்கிறேன்; தியாகு நூலக நண்பர்களைத் தொடர்ந்து சந்தித்து இலக்கிய-அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்; சில நல்ல திரைப்படங்களையும் கண்டிருக்கிறேன். இத்தனைக்குமிடையில் படிப்பதற்கு நிறைய நேரம் இருந்திருக்கிறது; சும்மா இருக்கும் சுகத்துக்கும் நிறைய நேரமிருந்திருக்கிறது; ஒரு புத்தகம் (முகிலினி) எங்கள் தோட்டத்தில் வெளியிடப்பட்டது என்பதெல்லாம் எல்லோரும் சபிக்கும் 2016ம் ஆண்டை பாசத்துடன் திரும்பிப் பார்க்கவைக்கின்றன.

பட்டியலில் பல புத்தகங்கள் அளவில் சிறியவை; அதனாலும் பட்டியலின் நீளம் கூடியிருக்கலாம். குறைபட்டுக்கொள்ளவும் விசயங்கள் இல்லாமலில்லை: அறிவியல், வரலாறு, விவசாயம், கல்வி குறித்தெல்லாம் மேலும் அதிகமாய்ப் படித்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் படிக்கவேண்டும். படித்த புத்தகங்கள் குறித்து மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறேன்; மிகக் குறைவான குறிப்புகளே எடுத்திருக்கிறேன். எழுத வேண்டும்.  திருக்குறள் மொழிபெயர்ப்பு ஓராண்டாய்த் தடைபட்டு நிற்கிறது.

பட்டியலில் உள்ள புத்தகங்களில் அனேகமாக அனைத்தையும் துணிவுடன் பிறருக்குப் பரிந்துரைப்பேன். பரிந்துரைக்க முடியாதவற்றை பெரும்பாலும் பாதியில் நிறுத்திவிடுகிறேன் – அதுவே ஒரு நல்ல வடிகட்டிதான்.

ரஷ்ய எழுத்தாளர்கள் தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிகிறார்கள். தாஸ்தோவஸ்கியும் தால்ஸ்தோயும் இந்த ஆண்டும் என் படிப்பு நேரத்தை ஆக்கிரமிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இவ்வாண்டு படித்தவற்றுள் டாப் 2 புத்தகங்கள்: ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சின் The Second-hand Time,  Chernobyl Prayers.

அலெக்ஸிவிச் இலக்கியத்தின் எல்லைகளை விரித்திருக்கிறார். புனைவுகளும் கவிதைகளும் அரிதாகவே எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிற பல உயரங்களை இந்த இரண்டு புத்தகங்களிலும் எட்டியிருக்கிறார். அவரது எழுத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை எனினும், அவரது எழுத்துமுறையாலும் தொகுப்புமுறையாலும் தனித்து விளங்குகின்றன. படிக்கும் நமக்குள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. நாவல்களின் ஆழ அகலங்களைவிட அதிகமாய்ப் பயணப்பட்டிருக்கின்றன.

ஸெகண்ட் ஹாண்ட் டைம் சோவியத் வாழ்க்கை குறித்தும், அதன் சிதைவுக்குப் பின்னான மாற்றங்கள் குறித்தும் பல கோணங்களில் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது. சோவியத் கால அடக்குமுறையிலிருந்து விடுபடப் போராடி, ஒரு மோசமான வணிகச் சூழலில் சிக்கிக் கொண்ட மக்களின் உணர்வுகளை இந்நூலின் மையமாகக் கொள்ளலாம். நாங்கள் போராடியது சுதந்திரத்திற்காக, பிட்சாவுக்கும் பர்கருக்காகவும் அல்ல என்பது அடிக்கடி கேட்கும் ஒரு குரல். எத்தனை விதவிதமான குரல்கள்? ஒவ்வொரு குரலுக்கும் பல மாற்றுக்குரல்கள் ஒலிக்கின்றன. நிஜத்தில் நடந்ததிருக்கக்கூடும் என்று நாம் நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் கதையும் ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் வெளிப்படுகிறது. ஒட்டுமொத்தமாய் ஒரு நாவலின் முழுமையை விஞ்சுகின்றன.

செர்னோபில் ப்ரேயர்ஸ் அணு உலை விபத்துக்குப் பின்னர் நிகழ்ந்த மக்களின் வரலாற்றினைப் பதிவு செய்கிறது. கடந்த காலமா எதிர் காலமா என்ற மயக்க நிலையை உருவாக்குகின்றது. கதிர்வீச்சுகளால் பாதிப்படுவோம் என்று தெரிந்தும் கணவனோடு அவன் சாகும்வரையில் துணையாக இருக்கும் இளம்பெண், கதிர்வீச்சுகளின் பாதிப்புகளைப் பற்றி அறியாமலே அப்பகுதியில் வேலைக்கு அமர்த்துபடுபவர்கள், தெரிந்திருந்தும் துணிந்து செல்பவர்கள், ரோபோக்கள் கூட செல்ல முடியாத நெருக்கத்திற்குச் சென்று வரும் ராணுவத்தினர் என்று பலரும் பேசுகிறார்கள். அவர்களது வாழ்க்கை, காதல், அவர்கள் படித்த இலக்கியம், அரசியல் என்று ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களைக் குறித்துப் பதிவு செய்கிறார்கள்.  அசாத்தியமான துணிச்சல், அசட்டுத்தனமான நம்பிக்கை என்று சோவியத் மனநிலையின் இருவேறு கூறுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. இதிலும் ஒவ்வொரு பதிவையும் ஒரு சிறுகதையாகக் கொள்ளலாம். உண்மை புனைவை விட விசித்திரமானது, சோகமானது; சுவாரசியமானதும்கூட என்கிற எண்ணம் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இதைச் செய்திக்கட்டுரை என்று ஒதுக்கிவிட்டிருந்தால், இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பேரிழப்பாக இருந்திருக்கும். நல்ல வேளைவயாக நோபல் குழுவினர் அந்தத் தவிறைச் செய்யவில்லை.

‘பல குரல்களை இணைக்கும் எழுத்தின் மூலம், நமது காலத்தின் துயரத்துக்கும் துணிச்சலுக்கும், அவர் எழுப்பிய நினைவுச்சின்னத்துக்காக,’ அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  ‘நம் காலத்தின் உணர்வுகளின் சரித்திரத்தையும், ஆன்மாவின் சரித்திரித்தையும் அவர் எழுதினார்; கூறுபொருளால் மட்டுமின்றி வடிவ ரீதியாகவும் சோதனை செய்து ஒரு புது இலக்கிய வகைமையை அவர் உருவாக்கினார்,’ என்றும் நோபல் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நோபல் குழு அறிவித்தத்து. இப்பாராட்டுகள் எவ்வகையிலும் மிகையானவை அல்ல.

டோரிஸ் லெஸ்ஸிங்கின் Grass is Singing – இனவெறி, மாறும் விவசாய முறைகள், திருமணத்துக்குப் பின் கிராமத்துக்குக் குடிபெயரும் ஒரு இளம் பெண்ணின் தனிமை என்று இந்த நூல் பல விதங்களில் எனக்கு அணுக்கமாக இருந்தது.

அதே போல், கண்மணி குணசேகரனின் கோரை. அகற்றமுடியாத கோரை முளைத்தவிட்ட விவசாய பூமியை களமாகக் கொண்டு, மாறும் பொருளாதாரச் சூழலில் ஒரு விவசாயியின் வாழ்க்கையை நேரடியாகவும், நுட்பமாகவும் விவரிக்கிறது.

விருதுகள் அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்கள் முன்பே வண்ணதாசனின் உலகிலும் சஞ்சாரம் செய்துவந்தேன். பின்னர், நெல்லையின் ஈரத்திலிருந்து, அசோகமித்திரனின் வரண்ட தண்ணீருக்குள் ஒரு பாய்ச்சல்.

தமிழ் நவீன கவிதைகளை இவ்வாண்டு அதிகம் படிக்கவில்லை. ஆனால், பாரதியும், பழந்தமிழ்ப் புலவர்களும், திருமுறை நால்வரும், ஆங்கிலக் கவிகளும்  ஆண்டு முழுவதும் துணைக்கு வந்தனர்.
இனி, பட்டியல்:

  1. How Children Learn – John Holt
  2. The Child’s Language and the Teacher – Krishna Kumar
  3. Vinoba on Education – Vinoba Bhave
  4. Woman in the Dunes – Abe Kobe
  5. Grass is Singing – Dorris Lessing
  6. Poems of Love and War – A.K.Ramanujan
  7. The Nation’s Favourite Poems (BBC Books)
  8. The Best of Ruskin Bond – Penguin
  9. சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி – தமிழில், தி.சு.சதாசிவம்
  10. அரூப நெருப்பு (சிறுகதைகள்) – கே.என்.செந்தில்
  11. கனிவு  – வண்ணதாசன்
  12. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
  13. பெயர் தெரியாமல் ஒரு பறவை – வண்ணதாசன்
  14. முகிலினி – இரா.முருகவேள்
  15. சிலப்பதிகார ஆய்வுரைகள் – ம.பொ சிவஞானம்
  16. வள்ளுவரும் இளங்கோவும் – அ .சா.ஞானசம்பந்தம்
  17. பகவான் புத்தர் – தர்மானந்த கோஸம்பி (மராத்தி) – தமிழில், கா.ஸ்ரீ.ஸ்ரீ.
  18. பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம்
  19. Box – ஷோபா சக்தி
  20. இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (கிழக்கு பதிப்பகம்) (நான் முடித்தவை:)
    – மழை
    – போர்வை போர்த்திய உடல்கள்
    – கால எந்திரம்
    – நந்தன் கதை
    – ஒளரங்கசீப்
    – ராமானுஜர்
    – கொங்கைத்தீ
  21. பருவம் – எஸ்.எல். பைரப்பா – தமிழில், பாவண்ணன்
  22. தண்ணீர் – அசோகமித்திரன்
  23. படைப்பாளிகளின் உலகம் (கட்டுரைத் தொகுப்பு) – அசோகமித்திரன்
  24. வ.வே.சு. ஐயர் – தி.செ.சௌ.ராஜன்
  25. அறம் – ஜெயமோகன் (இணையத்தில் சில கதைகளைப் படித்தது. முழுத் தொகுப்பு இப்போதுதான் படிக்கிறேன்)
  26. தேர்ந்தெடுத்த கதைகள் – கி.ராஜநாராயணன்
  27. காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும் – அருணன்
  28. The SecondHand Time – Svetlana Alexievich
  29. Chernobyl Prayers – Svetlana Alexievich
  30. தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் – நா.தர்மராஜன்
    – இரண்டு ஹுஸ்ஸார்கள் (Two Hussars)
    – குடும்ப மகிழ்ச்சி (Family Happiness)
    – கஜக்கோல் (Kholstomer)
    – நடனத்திற்குப் பிறகு (After the Ball)
    – கிரைஸ்ஸர் சொனாட்டா (The Kreutzer Sonata)
  31. குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்
  32. Beowolf – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
  33. Sir Gwain and The Green Knight – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
  34. A Study in Scarlet – Arthur Conan Doyle
  35. The Sign of the Four – Arthur Conan Doyle
  36. The Hound of the Baskervilles – Arthur Conan Doyle
  37. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
  38. சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்
  39. Notes from Underground – Dostoevsky
  40. White Nights – Dostoevsky
  41. கோரை – கண்மணி குணசேகரன்
  42. சாகுந்தலம் – காளிதாசன்  (கவித்துவம் குறைவான உரைநடை மொழியாக்கம்தான்…மொழிபெயர்ப்பாளர் பெயர் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேன்; அல்லயன்ஸ் பதிப்பகம் என்று நினைக்கிறேன்)
  43. பாஞ்சாலி சபதம் – பாரதி
  44. என் கதை – கமலா தாஸ் – தமிழில், நிர்மால்யா
  45. உலகப் புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைகள்) – வைக்கம் முகம்மது பஷீர்
  46. தபால்காரன் (Vieille France (The Postman)) – மார்ட்டின் டுகார்ட் (Roger Martin du Gard) – தமிழில், க.நா.சு
  47. The Agricultural Testament – Sir Albert Howard
  48. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்
  49. A Street Car named Desire – Tennessee Williams
  50. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் – போகன் சங்கர்

கூடுதலாக, இவ்வாண்டு படித்த சில நீண்ட சிறுகதைகளும், ஒரு முக்கியமான கட்டுரையும்:

  1. The Crocodile – Dostoevsky
  2. The Cloak – Gogol
  3. What we talk about when we talk about love – Raymond Carver
  4. Patriotism and Government – Leo Tolstoy

பகுதி படிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ள சில புத்தகங்கள்:

  1. (கு.அழகிரிசாமி சிறுகதைகள்)
  2. (கு.ப.ரா சிறுகதைகள்)
  3. (The Story of Philosophy – Will Durant)
  4. (தொல்காப்பியம்)
  5. (சிலப்பதிகாரம் – உ.வே.சா. பதிப்பு)
  6. (Norton’s Anthology of English Literature, The Major Authors)
  7. (Where I am calling from – Short stories –  Raymond Carver)

 

தொடர்புடைய பதிவுகள் :

2015ல் படித்தவை

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


2015ல் படித்தவை

திசெம்பர் 31, 2016

தலைப்பில் பிழையில்லை. ஓராண்டு தாமதமாகத் தொகுத்தாலும், 2015ல் படித்த பல புத்தகங்கள் குறித்து சிறு குறிப்புகள் எழுதிவைத்திருந்ததால், பெரும்பாலான புத்தகங்களை நினைவுபடுத்திப் பட்டியலில் சேர்த்து விட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

  1. வாழ்விலே ஒரு நாள், One Day in the life of Ivan Denisovich – சோல்ஸெனிட்சின் (எம்.கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு)
  2. தீட்டு (சிறுகதைகள்) – அழகிய பெரியவன்
  3. அன்னை (La Madre) – கிரேசியா டெலடா (Grazia Deledda) – தமிழில், தி.ஜானகிராமன்
  4. The Way Home – Contemporary Bengali Short fiction, Edited by Aruna Chakravarti, Penguin
  5. Life of Mahatma Gandhi – Loius Fischer
  6. The Portrait of a Lady – Henry James
  7. Makers of Modern Asia – Ramachandra Guha
  8. The Muddy River – P.A.Krishnan
  9. கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி
  10. உபரா – லட்சுமண் மானே (மராத்தி) – தமிழில் – எஸ்.பாலச்சந்திரன்
  11. கூந்தப்பனை (குறுநாவல்கள்) – சு.வேணுகோபால்
  12. திசையெல்லாம் நெருஞ்சி (குறுநாவல்கள்) – சு.வேணுகோபால்
  13. வெண்ணிலை (சிறுகதைகள்) – சு.வேணுகோபால்
  14. நாஞ்சில் நாடன் கதைகள்
  15. சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
  16. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்
  17. அஃகம் சுருக்கேல் (கட்டுரைகள்) – நாஞ்சில் நாடன்
  18. சாதியும் நானும் – தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன்
  19. மாதொருபாகன் – பெருமாள் முருகன்
  20. பாரதிபுரம் – யு.ஆர்.அனந்தமூர்த்தி – தமிழில், தி.சு.சதாசிவம்
  21. மகாமுனி – பிரேம் ரமேஷ்
  22. Summerhill – A.S.Nell
  23. Small is Beautiful – E.F.Schumacher
  24. Dismantling the Inner School – David H.Albert
  25. கடைசி டினோசர் – தேவதச்சன்
  26. விண் வரையும் தூரிகைகள் – தேவதேவன்
  27. அந்தக் காலம் மலையேறிப் போனது – இசை
  28. உணவே மருந்து – டாக்டர் எல்.மகாதேவன்
  29. தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும் – பால சிவகடாட்சம்
  30. ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது – எஸ்.என்.நாகராசன் (நேர்காணல்)

 

தொடர்புடைய பதிவுகள் :

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


2014ல் படித்தவை

திசெம்பர் 31, 2014

பதின்ம வயதில் மிகச் சிரத்தையாக ஒரு நாட்குறிப்பேட்டில் நான் படித்த எல்லாப் புத்தகங்களின் பெயர்களையும் குறித்துவைத்திருந்தேன். ஒரு மிதிவண்டிப் பயணத்தின்போது பின்பக்கம் கேரியரில் வைத்திருந்த அந்த நாட்குறிப்பைத் தவறவிட்டேன். அப்போது விட்ட பழக்கத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் மீட்டெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் படித்த புத்தகங்களின் பட்டியலைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன்.

எந்தப் புத்தாண்டுத் தீர்மானங்களையும் நான் செய்துகொள்வதில்லை. மிக அரிதாகவே எந்த ஒரு பழக்கத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்கமுடிந்திருக்கிறது. இதுவும் அப்படியானதொன்றாகிவிட்டதில், மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மகிழ்ச்சி. நான் என்ன படித்தேன் என்பதை ஆண்டிறுதியிலாவது அமர்ந்து ஆவணப்படுத்திக்கொள்கிறேனே. இணையமும் முகநூலும் நிறையப் படிப்பது போன்ற ஒரு மயக்கத்தை உருவாக்கித்தந்தாலும், புத்தகங்களை முழுக்கப் படித்து முடிப்பதில் கிடைக்கும் நிறைவு அவற்றில் கிடைப்பதில்லை.

இந்த ஆண்டு சென்னையிலிருந்து கோவைக்கு இடம்பெயர்ந்த பின் நான் கண்டுகொண்ட முக்கியமான மூன்று நண்பர் குழுக்கள் : தியாகு புத்தக நிலையம் (நூலகம்), அருவி அமைப்பு, கோணங்கள் திரைப்படச் சங்கம். இந்த நண்பர்களின் மூலமாக நிறைய கலை, இலக்கிய ஆளுமைகளோடு உரையாடுவதற்கும் பழகுவதற்கும் கிடைத்த வாய்ப்புகள், பல புத்தகங்கள் படிப்பதற்கிணையான உணர்வினை அளித்தன. விட்டல் ராவ், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சுகுமாரன், யுவன் சந்திரசேகர்,  இசை, பாவண்ணன், ராமானுஜம், எஸ்.என்.நாகராஜன், நாஞ்சில நாடன், அ.கா.பெருமாள், ஜெயமோகன் என்று நீளும் ஒரு தனிப் பட்டியல் இடலாம்.

தியாகு நூலகத்தில் புத்தகங்கள் பற்றித் தொடர்ந்து உரையாட நண்பர்களும் களமும் காலமும் அமைந்தது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். அரசாங்க நூலகத்தில் புத்தகம் எடுத்துவந்து படிக்கும் பழக்கத்தையும் பல்லாண்டுகளுக்குப் பின் புதுப்பித்துக் கொண்டேன். இறைந்து கிடந்தாலும் அங்கும் சில அரிய புத்தகங்கள் கிடைத்தன – முக்கியமாக, The Revolutionary Gandhi என்ற அற்புதமான புத்தகம்.

இனி, நான் படித்தவற்றின் பட்டியல்:

  1. The Revolutionary Gandhi – Pannalal Dasgupta
  2. Towards New Education – Gandhi
  3. The Economy of Permanence – JC Kumarappa
  4. The Beautiful Tree – Dharampal
  5. The Montessori Method – Maria Montessori
  6. Gandhi Before India – Ramachandra Guha
  7. Panorama – A Selection of Poems (Editor : JW Peterson)
  8. மரங்கள் – நினைவிலும் புனைவிலும் – தொகுப்பு : மதுமிதா
  9. மேகதூதம், ருதுசம்ஹாரம் – காளிதாசன் (தமிழில் – மதுமிதா)
  10. காலம் தோறும் தொன்மங்கள் – அ.கா.பெருமாள்
  11. கொரில்லா – ஷோபா சக்தி
  12. கோவேறு கழுதைகள் – இமையம்
  13. கள்ளம் – தஞ்சை பிரகாஷ்
  14. நிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்
  15. மணற்கடிகை – எம்.கோபாலகிரூஷ்ணன்
  16. காம்ரேடுகள் – விட்டல் ராவ்
  17. வெட்டுப்புலி – தமழிமகன்
  18. மிளிர்கல் – இரா.முருகவேள்
  19. முதற்கணல், நீலம் – ஜெயமோகன்
  20. உச்சிவெயில், வேஷங்கள் – இந்திரா பார்த்தசாரதி
  21. கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர்.ராஜமையர்
  22. பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரன்
  23. முதல் 74 கவிதைகள் – எம்.யுவன்
  24. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
  25. கிரூஷ்ணன் நிழல் – முகுந்த் நாகராஜன்
  26. 38 கவிதைகள் – பேயோன்
  27. என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ்
  28. கல்வெட்டுக்கலை – நடனகாசிநாதன்
  29. கீழை மார்க்சியச் சிந்தனையாளர் நாகராசன் (75ம் பிறந்த நாள் மலர் – கட்டுரைகள்) – எஸ்.என்.நாகராஜன்
  30. இந்திய இலக்கியம் (கட்டுரைகள்) – க.நா.சுப்ரமண்யன்

கடைசியாகக் குறிப்பிட்ட புத்தகத்தில், க.நா.சு. கூறும் ஒரு வரி, கிடைத்திருக்கும் நேரத்தையும் வாய்ப்பையும் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஏங்கவைத்தது : ‘Dante என்கிற மகாகவியின் காவியத்தைப் படிப்பதற்காக இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்டேன்; Cervantes எழுதிய Don Quixote என்கிற நாவலைப் படிப்பதற்காக நான் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டேன்.’

க.நா.சுப்ரமண்யம்

தெரியாத மொழிகளைக் கற்றுக்கொள்ளாவிடினும் தெரிந்த ஆங்கிலத்திலும் தமிழிலும் பெருகிநிற்கும் சமுத்திரத்தின் ஒரு துளியையாவது அள்ளிப் பருகிவிடவேண்டும்.

எம்.யுவன், இசை, தேவதேவன், ஞானக்கூத்தன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், சாம்ராஜ், போகன் சங்கர், வண்ணதாசன் கவிதைகளில் மூழ்கித்திளைத்த இரண்டு வாரங்களுடன் 2014 இனிதே நிறைவடைகிறது. புத்தாண்டு புதிய புத்தகப் புதையல்களுடன் எனக்கும் உங்களுக்கும் மலரட்டும்.

தொடர்புடைய பதிவுகள் :

2013ல் படித்தவை

2012ல் படித்தவை