மகிழ் பற்றிய என் முதல் தமிழ்ப்பதிவு. காரணம் அவள் இன்று கோவையில்.
இல்லம் திரும்பும் போது, துள்ளி வந்து, கதவு திறந்து, தலை சாய்த்து, புன்னகை பூத்து அவள் என்னிடம் தாவி வரப்போவதில்லை இன்று.
வெறிச்சோடி இருக்கிற அலுவலகம் விட்டு வீடு செல்ல – முதல் முறையாய் – முனைப்பு ஏதும் தோன்றவில்லை.