கண்ணோட்டம்

மார்ச் 28, 2012

செய்தித்தாளின் அத்தனை பக்கங்களையும் புரட்டிப்பார்த்தேன்.
அதுகுறித்த செய்தி எதுவும் காணவில்லை.
நேற்று சென்னை நெடுஞ்சாலையில்
ஏதோ விபத்தில்
தலையில் அடிபட்டு
மூக்கில் ரத்தம் வழியக் கிடந்தவன்
பிழைத்திருப்பானோ?
பாவம்.
இளம் வயதாகத்தான் தெரிந்தது.
பிழைத்திருக்கட்டும்.