கடந்த இரண்டு ஆண்டுகளாய் இத்தகைய பட்டியல்களைப் பதிவிட்டுள்ளேன். முன்னெப்போதையும் விட (கல்லூரி முடித்தபின்) அதிகம் படித்தது 2012ல். புனைவுகள் மட்டுமின்றி, வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், மேலாண்மை தொடர்பான நூல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், ஏன், சில ஆன்மீக நூல்கள் என்று என் வாசிப்புத்தளம் விரிந்துள்ளது. அனைத்து நூல்களைக் குறித்தும் இப்போது குறிப்பெழுதுவது சாத்தியமானதாகவும், சரியானதாகவும் தெரியவில்லை. எனவே என் மனதுக்கு நெருக்கமான சில புத்தகங்களின் பட்டியலை மட்டும் இங்கே தருகிறேன்.
- புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
- கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
- ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்திரன்
- இருவர் (குறுநாவல் தொகுப்பு) – அசோகமித்திரன்
- கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்
- என் பெயர் ஆதிசேஷன் – ஆதவன்
- ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
- கடல்புறத்தில் – வண்ணநிலவன்
- அன்பின் வழியது (சிறுகதைத் தொகுப்பு) – வண்ணதாசன்
- அபிதா – லா.ச.ரா.
- அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
- நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
- குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்
- ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முஹம்மது மீரான்
- பொய்த்தேவு – க.நா.சு.
- கோரா – தாகூர்
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்
- பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
- பொய்யும் வழுவும் – போ.வேல்சாமி
- என் சரித்திரம் – உ.வே.சா.
- அருந்தவப் பன்றி – பாரதி கிருஷ்ணகுமார்
- சித்திர பாரதி – ரா.அ.பத்மநாபன்
- வள்ளுவரின் அறிவியலும், அழகியலும் – கோவை ஞானி
- திருக்குறள் : வள்ளுவர் கண்ட தத்துவம் (தெ.பொ.மீ.களஞ்சியம் – காவ்யா) – தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
- காந்தியும் தமிழ்ச் சனாதிகளும் – அ.மார்க்ஸ்
- தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
- பகவத் கீதை (பாரதி, ஜெயமோகன், அரவிந்தர் மொழியாக்கங்களில்)
- அர்த்த சாஸ்திரம்
- தம்மபதம் (டாக்டர்.ராதாகிருஷ்ணன், ஏக்நாத் ஈஸ்வரன் மொழியாக்கங்களில்)
பட்டியலிட்டபின், கடந்து வந்த பாதையைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. கடக்க முடியாமல் நீண்டிருக்கும் பாதை அதைவிட மலைக்கச் செய்கிறது. இவற்றில் எல்லா படைப்புகளுமே ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவை. மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கத் தயங்காதவை.
ஒரு சில படைப்புகளைக் குறித்து முகநூலில் அவ்வப்போது எழுதியுள்ளேன். இவற்றுள் ப.சிங்காரத்தின் இரண்டு நூல்களும் நாம் என்றென்றும் கொண்டாட வேண்டியவை; உலக இலக்கியங்கள்; தனிப் பதிவாக எழுதுவேன். இன்னும் பல நூல்கள் தனிப் பதிவுகளில் கவனப்படுத்தப்பட வேண்டிவை.
இந்த ஆண்டு என்னை மிகவும் பாதித்த நூல்கள்:
- Mohandas : A True story of A Man, his People and an Empire – Rajmohan Gandhi
- Ghaffar Khan, Non-violent Badshah of the Pakhtuns – Rajmohan Gandhi
- My days with Gandhi – Nirmal Kumar Bose
- மகாத்மாவுக்குத் தொண்டு (மொழிபெயர்ப்பில்) – நாராயண் தேசாய்
- சின்ன சங்கரன் கதை (முழுமையாய்ப் பதிப்பிக்கப்படாதது – அதன் சாத்தியங்களுக்காக) – பாரதி
- என் சரித்திரம் – உ.வே.சா.
- Essential writings of B.R.Ambedkar – Valerian Rodrigues
- புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
- Gora – Rabindranath Tagore
- Dhammapada – Buddha
- Martin Luther King, Jr – Marshall Frady
- பெரியார் களஞ்சியம் – (பாகம் 7ல் படித்த சில பகுதிகள்)
என்னை அசர வைத்த கதை : பிராயாணம் – அசோகமித்திரன். ஓர் ஆங்கிலக் கதையின் முடிவோடு ஒத்த முடிவுள்ளதுதான் என்றாலும், அதைக் காட்டிலும் பல பரிமாணங்களில் விரிந்து ஆழ்ந்து செல்லும் கதை.
என்னை மிரள வைத்த நூல் : Notes from the Underground – Dostoevsky. படித்த சில பக்கங்கள் நான் செல்ல விரும்பாத ஏதோ ஆழ்ந்த குகைக்குள் அழைத்துச் சென்று, பார்க்க விரும்பாத ஒரு கண்ணாடியை நீட்டத் தொடங்கியதால் படிப்பதை நிறுத்திக்கொண்டேன்.
நான் படித்த புத்தகங்களை விடவும் அதிகம் கற்றுக்கொண்டது, நான் சந்தித்த மனிதர்களிடமிருந்து – நாராயண் தேசாய், கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், நம்மாழ்வார், முனைவர் மார்க்கண்டன், குத்தம்பாக்கம் இளங்கோ, பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சாந்தி ஆசிரமத்தின் மினோட்டி அறம், வினு அறம், அஸீமாவின் தேவிகா, காந்தி அமைதி மையத்தின் குழந்தைசாமி என்று இன்னொரு பெரும் பட்டியலிட வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரோடும், மேலும் பலரோடும், தனித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது 2012ல் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.
தொடர்புடைய பதிவுகள் :
Kannan, 10 Years back I red a Novel called “Farewell to Arms by Ernest Hemingway (Tamil Version)” , itz greatest Novel I red in my life (War subject). I introduced these novel to Charu Nivethitha also. when I red Pa. Singaram’s Novel, I enjoyed same feeling too. En Peyar Adhiseshan also great novel, great collection … last week i completed my first round @ Book Fair. will update you my book list soon
Saran
Thanks Saran. In fact, I’ve written about the comparison between Farewell to Arms and Puyalile oru thoni in another post that I haven’t published yet. Pa.Singaram has mentioned that Farewell to Arms is his favorite novel. I personally rate Puyalile Oru Thoni much higher than Farewell to Arms.
100% I agree with you kannan, last 3 year back only i red singaram’s novel, Farewell Novel I red 10 years back, Thatz why I compared both. i red in tamil version. itz very old book (believe on or before 1965 – released) have you come across one novel from Ernest ? itz related to fisher man’s story. that is also a great novel.
Yes Saran, The Old man and the sea. I liked that one.
Yes Kannan, great novel
I was wondering why you didn’t post a reading list earlier this year like you used to. (Forgot you were on FB sabbatical then.) Now, I got this, stumbling across your blog. Keep it up.
Thanks Babu.
how do u find time to read so much,.. feel jealous.. a very exhaustive and diverse list..
[…] 2012ல் படித்தவை […]
[…] 2012ல் படித்தவை […]
[…] 2012ல் படித்தவை […]
[…] 2012ல் படித்தவை […]
[…] 2012ல் படித்தவை […]