சகதிக்குள் எங்களை எவனோ தள்ளினான்.
தள்ளியவன் நகர்ந்தான், யுகங்கள் நகர்ந்தன.
சகதியின் மணம் பழகிப்போனது.
பலருக்குப் பிடித்தும்போனது.
எங்கள் மலங்கள் கலந்து சகதி விரிந்தது.
சகதிக்குள் தனித்தனி பாகங்கள் பிரித்தோம்.
சகதியில் சந்தணமென்றும் துர்மணமென்றும்
பகுத்துகொண்டோம்.
சரித்திரம் மறக்காமல் அவ்வப்போது
சகதிக்குள் தள்ளியவனைச் சபித்தோம்.
சகதியின் இருப்பைக் காக்கின்றன
எங்கள் நண்டுக் கரங்கள்.