சிறுகை அளாவிய சூப்

ஒக்ரோபர் 12, 2014

மகிழ், நேற்று, பல சின்ன கிண்ணங்களில் ஸ்பூனோடு, ஆளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு, தக்காளி சூப் எல்லாருக்கும் கொடுத்தாள். எப்போதும் வெறும் குண்டாவில் தானே எல்லாமும் தருவாள், இன்று எப்படி நிஜ சூப் வந்ததென்று பார்த்தேன்.

அம்மா சொன்னபோதுதான் தெரிந்தது, அது அவளே தக்காளியைப் பிசைந்து, சீரகம், மிளகு, மக்காச்சோள மாவு, உப்பு எல்லாம் போட்டு, நாற்காலி மீது ஏறி நின்று அடுப்பில் வைத்துச் சிறுகையால் அளாவிய சூப். உண்மையிலேயே ருசித்தது.

மலாலா நோபல் பரிசு வென்றதைக் கொண்டாடுகிறாளாம்.

Mahirl_Malala

சென்ற ஆண்டு மகிழ் பள்ளியில் இருந்தபோது, ஒரு விழாவில், மலாலா வேடத்தில்.