நட்டகல்

திசெம்பர் 28, 2012

சென்னிமலையில்

சித்தர் சமாதி.

விரல்களால் பரவசமாய்க்

கன்னத்தில் போட்டு

மொணமொணவென்று

முனுமுனுக்கிறான்

பக்தன்.

நட்டகல்லாகி

நிற்கிறார்

சிவவாக்கியர்.


கோப்பையிலே குடி இருப்பு

திசெம்பர் 7, 2012

இரட்டைக் குவளைகள் ஒழிந்தன.

ப்லாஸ்டிக் உபயத்தில்

ஆளுக்கொரு குவளை.