ஒரு குட்டி அர்பன் நக்சல்

நவம்பர் 20, 2018

அப்பா, இந்த புக் படிக்கட்டுமாப்பா?

ம்.

அப்பா!

ம், லைப்ரரி புக் எல்லாம் இருக்கேடா…

அப்பா, ஏதாவது புக் எனக்கு டெம்ப்ட் ஆயிருச்சுனு வைச்சுக்கப்பா…அப்பா!

ம்.

அப்பா, ஏதாவது புக் எனக்கு டெம்ப்ட் ஆயிருச்சுனு வைச்சுக்கப்பா, அத படிச்சு முடிக்கிற வரைக்கும் எம் மனசெல்லாம் அதுலதான் இருக்கும்.

சரி, படி.

ய்யேஏஏ…சரிதான், இவளும் அர்பன்/ரூரல் நக்சலாகத்தான் வருவாள் போலிருக்கிறது.