உலக நாயகன் படம் என்பதாலோ என்னவோ, ஆங்கிலத்தில் விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றியது.
இங்கே; எழுத மறந்தது – நல்ல படங்களில் கூட, ‘உலக நாயகனே’ மாதிரியான குமட்டலான தற்பெருமைப் பாடல்கள் தேவையா? கடவுள் பக்தியைக் கிண்டலடிக்கிற கமலை ரசிக்கிற அதே வேளையில், மனித பக்தியை முன்னிலைப் படுத்தும் இத்தகு பாடல்களைக் கண்டிக்கவும் வேண்டும்.
நல்ல வேளையாய், மற்ற விமர்சனங்கள் படிக்கும் முன்னரே, படம் பார்த்து, என் கருத்துகளையும் பதிப்பித்து விட்டேன். பின்னர் பார்க்க, படிக்க நேர்ந்த விமர்சனங்கள் எல்லாமே அதீதமாய் தாக்கியும், தேவையில்லாமல் பாராட்டியும் இருந்தது எதுவும் பிடிக்கவில்லை. பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ரவிக்குமாரின் சுயபுராணத்தைப் பார்த்த பிறகு, இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேனேயானால், நிச்சயம் எனக்குப் பிடித்திருக்காது. அப்படி நிகழாதது குறித்து இப்போது மகிழ்ச்சிதான்.