சென்ற வாரம் இரண்டு புத்தகங்கள் பாதி படித்த நிலையில் இருந்தன. எனவே புத்தாண்டை ஒரு வாரம் தள்ளிப்போட்டுவிட்டேன். இன்றுதான் புத்தாண்டு தொடங்கியது. 2017ல் நான் படித்த புத்தகங்களின் பட்டியல் இதோ. ஆண்டு முழுவதுமே காலத்தோடு விளையாடிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன்.
ஆங்கிலத்திலும் தமிழிலும், சிறியதும் பெரியதுமாக, முக்கியமானவையும் முக்கியமற்றவையுமாகப் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். தரம்பால் நூலைத் தவிர வேறு எதற்கும் விரிவான குறிப்புகள் எழுதவில்லை என்பதுதான் பெரிய குறை. சில புத்தகங்களுக்குக் கட்டாயம் எழுதவேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.
புத்தகங்களைக் கோவையிலும், கிராமத்தில் தோட்டத்திலும், மருத்துவமனைகளிலும், திருமண மண்டபங்களிலும், பயணங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் என்று வெவ்வேறு சூழல்களில் படித்தேன். அச்சு வடிவத்திலும், மடிகணினியிலும், கின்டிலிலும், ஐபேடிலும், கைபேசியிலும் என்று பல்வேறு கருவிகளில் படித்தேன் – ஒரே புத்தகத்தை வெவ்வேறு ஊடகங்களில் படித்ததும் நிகழ்ந்தது . ஹர்ஷாவின் ‘நாகநந்தா’ நாடகத்தை பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு, அதே பேருந்துநிறுத்தத்தில் மீண்டும் அமர்ந்து படித்து முடித்துவிட்டுத்தான் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்றேன். ஒரு புத்தகம் பேருந்தில் திருட்டுப் போய்விட்டதாக நினைத்து, போலீசுக்குக் கொடுத்தப் புகார் கடிதத்தில் கூட குறிப்பிட்டுவிட்டேன். ஆனால், அது களவு போகவில்லை. இன்னொரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது, இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால், அவசரமாக, கவனமின்றி இறங்கியதில் இன்னொரு பர்சைப் பறிகொடுத்தேன்.
மனைவியோடும், மகளோடும் சேர்ந்து பல புத்தகங்களும் கதைகளும் படித்தேன். மகள் Gulliver’s Travelsன் சுருங்கிய வடிவம் படிக்கும்போது, கூடவே நான் மூல நூலைப் படித்தது ஒரு புதிய அனுபவம்; சிறு வயதில் படித்த சுருக்கப்பட்ட க்ளாசிக்களையெல்லாம் மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.
- இன்று – அசோகமித்திரன்
- சீர்மை – அரவிந்த் க
- சின்னு முதல் சின்னு வரை – வண்ணதாசன்
- முத்துக்கள் பத்து (சிறுகதைகள்) – சா.கந்தசாமி
- 1945ல் இப்படியெல்லாம் இருந்தது – அசோகமித்திரன்
- குழந்தைப் பருவத்துக் கதைகள் – கி.ராஜநாராயணன்
- கடல்புரத்தில் – வண்ணநிலவன் (மறுவாசிப்பு)
- ஒரு நாள் – க.நா.சு.
- பறவை வேட்டை – அசோகமித்திரன்
- கண்டி வீரன் – ஷோபா சக்தி
- அன்புள்ள ஸ்நேகிதிக்கு – லா.ச.ராமாமிருதம்
- கொற்றவை – ஜெயமோகன்
- எழுதழல் – ஜெயமோகன்
- காடு- ஜெயமோகன்
- சிலப்பதிகாரம் – உ.வே.சா பதிப்பு, புலியூர் கேசிகன் உரை (மறுவாசிப்பு)
- தொல்காப்பியம்: பொருளதிகாரம்
- அம்பேத்கரின் கல்விக்கொள்கைகள் – ரவிகுமார்
- காந்தியக் கல்வியும் பிற கல்விமுறைகளும் – பங்கஜம்
- புகழ் பெற்றி நாவல்கள் – க.நா.சு.
- புதுமைப்பித்தன் வரலாறு – தெ.மொ.சி.ரகுநாதன்
- இலக்கியத்தின் ரஹசியம் (கட்டுரைகள்) – புதுமைப்பித்தன்
- தேவார இசையமைப்பாய்வு – இ.அங்கயற்கண்ணி
- சிலப்பதிகார இசைத்தமிழ் – S.ராமநாதன்
- நண்பர்கள் நினைவில் பாரதியார் – இலசை மணியன்
- உறவினர் நினைவில் பாரதி – இலசை மணியன்
- The Bellarosa Connection – Saul Bellow
- Happy Days – Samuel Beckett
- Henry IV Part 1 – William Shakespeare (மறுவாசிப்பு)
- Doctor Zhivago – Boris Pasternak
- The Last Temptation – Nikos Kazantzakis
- The Blue Umbrella – Ruskin Bond
- Death in Venice and other stories – Thomas Mann
- The Forged Coupon and other Stories – Leo Tolstoy
- What Men Live by and other Stories – Leo Tolstoy
- Crime and Punishment – Dostoevsky
- Hocus Pocus – Kurt Vonnegut
- Across the Black Waters – Mulk Raj Anand
- Nagananda – Harsha
- Gulliver’s Travels – Jonathan Swift
- Poems of Love and War – A.K.Ramanujan
- Taking Issue and Allah’s Answer – Iqbal
- Four Centuries of American Poetry – Mohan Ramanan
- The Waste Land – T.S.Eliot (With great annotations from Norton’s Anthology of English Literature)
- The Ruined Cottage – William Wordsworth (From Norton’s)
- Don Juan (Canto 1) – Lord Byron (From Norton’s)
- C.N.Annadurai – P.C.Ganesan
- The Dragons of Eden – Carl Sagan
- Essential Writings of Dharampal – Gita Dharampal
- Zinky Boys – Svetlana Alexievich
- Deschooling Society – Ivan Illich
- Gandhi Patel: Letters and Speeches – Differences within Consensus – Neerja Patel
- The Charkha and the Rose – Publications Division
- My Life is my Message – Sadhana (Part 1) – Narayan Desai
- Ram Manohar Lohia – Indumati Kelkar (Translated by Desh Raj Goyal)
- Jeevani: Ayurveda for Women – Dr.P.L.T.Girija
இவ்வாண்டில் கணிசமான பகுதி படிக்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாத புத்தகங்கள்:
- Capital: Volume 1 – Karl Marx
- Capital in 21st Century – Thomas Piketty
- Sakuntala: Texts, Readings, Histories – Romila Thappar
- Collected Stories of Isaac Bashevis Singer
- Open Letter on Famine to Lord Curzon – RC Dutt
- White Mughuls – William Dalrymple
- Iliad – Homer (Translated by Alexander Pope)
- Norton’s Anthology of English Literature, The Major Authors
- புறநானூறு
- ஊரும் பேரும் – ரா.பி.சேதுப்பிள்ளை
- இசைத்தமிழ் வரலாறு இரண்டாம் பகுதி — து.ஆ.தனபாண்டியன்
- அ.முத்துலிங்கம் கதைகள்
- டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி – டெட்ககோ குரோயாநாகி
தொடர்புடைய பதிவுகள் :
[…] 2017ல் படித்தவை […]