எனக்குச் சாக்கடையில் கைவிடப் பிடிக்காது.
பந்து விழுந்தால் எடுக்க மறுத்துவிடுவேன்.
பந்தை அடிக்கும்போதும்,
அடித்தபந்து அருகில் வரும்போதும்,
சாக்கடையில் விழக்கூடாது என்பதிலேயே
கவனமாய் இருந்தேன்.
ஆனாலும் சாக்கடையில் விழுந்து மீட்கப்பட்ட பந்தில்
விளையாடாமல் இருந்ததில்லை.
விளையாடியும்
நானொன்றும் சச்சினாகிவிடவில்லை.
இன்றும் சிறுவர்கள் எங்களூர்ச் சாலையில்
விளையாடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
சாக்கடை இன்னும் அகலமாய் ஆழமாய்
கிளைபரப்பித் ததும்பி நிற்கிறது.
hmmm
யதார்த்தமான விடயம். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
Snapjudge, Dr.Muruganandan – உங்கள் தொடர்ந்த வருகைக்கும், வரவேற்பிற்கும் நன்றி.