குழந்தைகள் தினத்தன்று
நேரு மாமா ஏன் வரவில்லை
என்று இன்னமும்
குழம்பிப் போயிருக்கிறாள் அவள்.
‘அப்பா! நேரு மாமா வரமாட்டாங்களாப்பா?’
‘மாட்டாங்கடாம்மா’
‘காந்தித் தாத்தாவும் வரமாட்டாங்களாப்பா?’
‘ஹூஹூம்.’
‘டிவிலதான் வருவாங்களா? ஏம்பா?’
‘ஆமாடா. அவங்களுக்கு வயசாயிருச்சா,
அதனால இந்த பூமியவிட்டு போயிட்டாங்க.’
‘அப்பா, உனக்கு வயசாயிட்டா நீயும்
பூமியவிட்டுப் போயிடுவயா?’
‘….’
‘என்னவிட்டுட்டு நீ எங்க்கயும் போகக்கூடாது.
சரியா?’