அவன் கவிஞனே அல்லன்
என்றனர் அன்றைய இலக்கியவாதிகள்.
மிகவும் எளிமையானவை,
மிகவும் நேரடியானவை,
ஆழ்படிமங்களே அற்றவை
என்று புறந்தள்ளப்பட்டன
அவன் கவிதைகள்.
அந்தப் பெயர் தெரியாக்கவிஞனும்
அவன் குழந்தைக்குமட்டும்
ஒரு பாடல் கற்றுக்கொடுத்துவிட்டு
மாண்டு போனான்.
அவனைப் புறக்கனித்தவர்கள்
மாண்டுபோனார்கள்.
அவர்கள் படைத்த
இலக்கியங்கள் இல்லாமற்போயின.
எப்படியோ இன்றும்
அப்பாடல் மட்டும் ஒலிக்கின்றது,
தமிழறிந்த எல்லாக்
குழந்தைகள் நாவிலும்:
நிலா நிலா ஓடி வா.
மிக அழகாகச் சொன்னீங்க நண்பா.
கடைசி வரை எதிர்பார்ப்போடு அழைத்துச் சென்று.
அதைநிறைவு செய்யும் விதமாக முடித்தமை பாராட்டுக்குரியது.
நன்றி குணா.
”……தமிழறிந்த எல்லாக்
குழந்தைகள் நாவிலும்:
நிலா நிலா ஓடி வா….”’
மிகப் பெரிய உண்மை….பதியப் பட்டுள்ளது.