மொட்டை மரத்தின்
உச்சியில்
உதிராமல்
பிடிவாதமாய்
ஒட்டி நிற்கும்
ஒற்றை இலை.
நேற்று
மொட்டைமாடியிலிருந்து
பார்த்தபோது
அழகான படிமமாய்த் தெரிந்தது.
எதற்கான
படிமம் என்பதுதான்
இன்னமும்
பிடிபடவேயில்லை.
இன்றைக்கு
அந்த இலையும் உதிர்ந்துவிட்டது.
எஞ்சியிருப்பது
என்மனைவி பிடித்த
புகைப்படம்தான்.
[படைத்தவனுக்குப் புரிந்தால்தான்
படிமமா?
படிப்பவனுக்குப் புரிந்தால் சரி.]
காற்று வந்து தன் சக இலைகளை பறித்து சென்றதை, மேகங்களிடம் முறையிட காத்திருந்த கடைசி இலை அது. அவசரகதியில் ஒரு காகம் அமர, தன் கதையை சுமந்து கொண்டு மெதுவாய் உதிர்ந்திருக்கும். காற்றின் துணையுடன் மண்ணை சேர்ந்து மக்கி போயிருக்கும் மேகத்தை சந்திக்காமலேயே. காக்கை அறிந்திருக்குமா இந்த நிகழ்வை.
மனோ – அருமை.