கவிதைக்கு முன்

முடிவு செய்துவிட்டேன்.

கவிதை எழுதிப்

பதிப்பிக்க வேண்டும்.

கவிதை எழுதுவதொன்றும்

பெரிய காரியமில்லை.

நயமாய்ப் புதிராய்

நாலு வார்த்தைகளை

மடக்கிப் போட்டால்

கவிதையாகி விடும்.

என்கீழ் எனக்குமேல்

வேலை செய்கிறவர்களிடம்

வார்த்தைகளை விற்றுவித்தாக்கி

வாழ்க்கை யோட்டு​கிறவனுக்குக்

கவிதை யெழுதுவதொன்றும்

பெரிய காரியமில்லைதான்.

ஆனால் அதற்குமுன்

நானொரு கனமான

புனைப்பெயர் பூணவேண்டும்.

சிக்க மாட்டேனென்கிறது.

2 Responses to கவிதைக்கு முன்

 1. kmohanonline சொல்கிறார்:

  புனைப்பெயர் என்கிற போர்வை அவசியம் தானா கண்ணா? கவிதையை உரக்கச் சொல்ல வந்த உனக்கு உண்மைப் பெயரைச் சொல்ல ஏன் தயக்கம்?

  • Kannan சொல்கிறார்:

   புனைப்பெயர் போர்வை இல்லை – அலங்காரம். அல்லது, எழுதுவதைத் தள்ளிப்போட இன்னொரு காரணம் 🙂 அல்லது, புனைப்பெயர்கூடத் தேர்ந்தெடுக்க முடியாதவன் என்ன கவிதை எழுதிவிடப்போகிறேன் என்ற ஏக்கமாகமும் இருக்கலாம்; கவிதை எழுதுவதென்ன பெரிய சாகஸம் என்ற மார்தட்டலைத் தாண்டி மறைந்திருக்கலாம்.
   எதுவென எனக்கே தெரியாததால்தான் இந்தப்பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: