மிரான் வின்ஸ்லாவ் (Miron Winslow) என்கிற அமெரிக்கப் பாதிரி உருவாக்கிய தமிழ்-ஆங்கில அகராதி இந்த இணைய தளத்தில் கிடைக்கிறது. 1862-ல் இப்படியோர் அகராதியை உருவாக்க அவர் எவ்வளவு கற்றிருக்க வேண்டும்; எவ்வளவு அலைந்திருக்க வேண்டும்; எவ்வளவு உழைத்திருக்க வேண்டும். நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
இன்று நமக்கு ஒரு சொடுக்கில் பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கும் தமிழ், ஆங்கல விளக்கங்கள் கிடைக்கின்றன. நான் திருக்குறளை ஆங்கில மொழியாக்கம் செய்வதற்கு, பரிமேலழகர் உரையோடு (வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் ஆராய்ச்சிக் குறிப்புரையுடன்), இதுவும் பெரும் உறுதுணை.
இவருக்கும் முன்னோடிகள், திருக்குறளை 1706 முதல் ஆராய்ந்தும், மொழிபெயர்த்தும் (ப்ரெஞ்ச், ஜெர்மன், லத்தீன்) இருக்கிறார்கள் என்பது மேலும் ஆச்சர்யமானது.