எத்தனை பேர் zee studioவில் ஞாயிற்றுக்கிழமை சத்யஜித் ரே படங்கள் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. பழைய தூர்தர்ஷனில் பன்மொழிப் படங்கள் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. இன்றைய குழந்தைகள் இழக்கிற நிறைய விஷயங்களில் ஒன்று.
அன்றாட நிகழ்வுகளை அழகாய், துல்லியமாய் தர முடிந்திருக்கிறது ரே’யால். ஒரு மனிதன் வெற்றி என்று தான் நினைக்கிற ஒன்றை அடையத் தர நேர்கிற விலைதான் படம். நாயக்கனுக்கும் நாயக்குமான (மனைவியின் தங்கை) உறவில் நளினம். இத்தகைய உறவுகளைத் திண்ணமாய் விளக்காமல், define செய்யாமல், விடுவதின் மூலம்தான் கதைக்கு ஓர் ஆழம் கிடைக்கிறது – நம்மவர்களும் இதைப் புரிந்து கொண்டால் நாமும் அடுத்த படியில் அடிவைப்போம்.
கடைசிக்காட்சியின் symbolism அழகு. படிகளில் உயர ஏற ஏற நாயகன் தளர்ந்து போகிறான்.
ஒரு தமிழ் பாத்திரமும் உண்டு. தமிழில் தத்துவார்த்தமாய்ப் பேசுகிறார். ‘நெருப்பை விட்டு மிகவும் விலகியிருக்காதே, பயனில்லை. மிக அருகே சென்றாலும் சுடும். சரியான தொலைவில் இரு.’
அதிக உழைச்சலில்லாமல் எளிதாக ஒரு நல்ல படம் எடுக்க முடிந்திருக்கிறது.