இந்தியாவில் ஒரு Google உருவாகுமா?

இந்தியர்கள் கணிப்பொறியுலகில் பெரும் வெற்றிகளைக் குவித்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனாலும் மென்பொருள் சேவைகளில் (software services) செழிப்பாய் வளர முடிந்த அளவிற்கு, ஏன் இன்னமும் Google, Microsoft போல் மென்பொருள் ஆக்கப்பொருள்களையும் (software products என்பதற்கு என்னால் இயன்ற மொழிபெயர்ப்பு), கருவிகளையும் (software tools) இந்திய நிறுவனங்களால் உருவாக்கி உலக அரங்கில் விற்க முடியவில்லை என்பது விந்தையான புதிர்.

பத்தே ஆண்டுகளில் Google போன்ற நிறுவனங்கள், ஆண்டாடுகளாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவருமே எட்டியிராத எல்லைகளைக் கடந்தது எப்படி? இந்த வெற்றிகளில் இந்திய வல்லுனர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதும், அமெரிக்க இந்தியர் சிலர் Hotmail, i2 மாதிரியான நிறுவனங்களை அங்கே உயிர்ப்பித்திருப்பதும் அடுத்த புதிர். இன்று அனைத்து மேனாட்டு ஆக்கப்பொருள் நிறுவனங்களும் (Microsoft, Intel, Google, TI, i2, SAP, Oracle)  ஆராய்ச்சிப் பணிகளை இந்தியாவிற்குப் பெருமளவு இடம்பெயர்த்துவிட்டன.

இத்தகைய நிறுவனங்களை நிறுவுவதற்குப் பெரும் முதலீடும் தேவையில்லை. மிகச் சிறிய அளவில், பல தருணங்களில் கார் கொட்டகைகளில், தொடங்கப்பட்டவைதாம் இந்நிறுவனங்கள்.

ஆக இத்தகு நிறுவனங்களை நிறுவ,

அ) இந்தியர்களுக்குத் தொழில்நுட்பத் திறன் இருக்கிறது.

ஆ) முதலீடு ஒரு பொருட்டல்ல

இ) புதுத்தொழில் துவங்கத் தேவையான நிர்வாக அறிவுக்கும் பஞ்சமில்லை.

தேவையானதெல்லாம் (இந்தியாவில் இருக்கும்போதே) வையத்தை விழுங்கும் விசாலப் பார்வை, அகண்ட சிந்தனை. ஒருமனதான விடாமுயற்சி. தெளிவான திட்டம். திண்ணமான நிர்வாகம். அவ்வளவே.

நம்பிக்கையுள்ளது.விரைவில் இங்கிருந்தும் ஒரு Google உருவாகும்.

Advertisements

4 Responses to இந்தியாவில் ஒரு Google உருவாகுமா?

 1. இரத்தினவேலு சொல்கிறார்:

  அய்யா,
  இங்கே இருக்கிற 99 விழுக்காடு மென்பொருள் ஆளர்கள் சாfட்வேர் “சித்தாள்கள்” தாமே அன்றி engineer கள் அல்லர். நாம் என்றுமே “technical slave” களாகத்தான் இருப்போம்.( political slavery ஆங்கிலேயர் செய்த்தை இனி அநேகமாக யாரும் யாரையும் செய்யமாட்டார்கல்.மாற்றாகப் பொருளாதார(economical), பண ஆதார(financial),தொழில்நுணுக்க(technological)–ஆனால் தொழில் அடிமைகளாக(technical slaves) அன்று— அடிமைகளாகச் செய்வதே வல்லரசுகளின், வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிற வழிமுறை.
  (தொழில் சொல்லிக்கொடுத்துச் செய்யவும் வைத்து ஆனால் நுணுக்கம்தெரிய விடாது நம்மைத் தொழில்நுணுக்க(technologicall) அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களுக்கு நனமை.

  இது கணிணித்துறையில் மட்டும் அன்று எல்லாத் தறைகளிலும் தான்.

  இந்தியர்களில் மிகப்பெரும்பான்மயர்க்கு( இப்போது) தொழில் நுணக்க அறிவு- தொழில் நுட்பத்திறன் கிடையாது.( உங்கள் (அ) வில் இருந்து னான் அடிப்படையிலேயே வேறுபடுகிறேன்.)

  இப்போதைக்கு இது மாறவும் மாட்டாது.காரணம் தொழில் நுட்பத்திறன் சமுதாயத்தில் வர , வளரக் கல்லூரிகள் பொறுப்பு. மிகப் பெரும்பாலான அரசு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அடி முட்டாள்களும்( distilled idiots),திமிர் முட்டாள்களுமே(arrogant idiots) பணி செய்கிறார்கள்.(பெயர் குறிப்பிடவும் முடியும் அவர்கள் மான இழப்பு வழக்கிட்டால் அறவே அவர்கள் மானத்தை இழக்கவைக்கவும் எனக்கு இயலும்.)
  இரத்தினவேலு 9840249988

 2. kannan சொல்கிறார்:

  இரத்தினவேலு,
  நான் கூறுவதை மறுக்கிறீர்கள் என்று இக்கூற்றை எடுப்பதைவிட, அதே ஆதங்கத்தை வேறு வகையில் வெளிப்படுத்துகிறீர்கள் என்பேன்.

  என் கேள்வியே, இங்குள்ள இதே கல்லூரிகளில் படித்து அமெரிக்கா செல்கிற இந்தியர்கள் நீங்கள் கூறுகிற நுணுக்கங்களை எப்படிக் கற்று நல்ல நிறுவனங்களை நிறுவுகிறார்கள், அல்லது, நிறுவத் துணையாக இருக்கிறார்கள், அந்த ஒன்றரை வருட MS அவர்களுக்கு எல்லாம் கற்றுக் கொடுத்துவிடுவதில்லை. இங்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தின் மீதுதான் அவர்களும் மாளிகையமைக்கிறார்கள்.

  இங்கே Google உருவாகாமைக்குக் காரணம், வெளிநாட்டுச் சதி என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். 1 விழுக்காடே இருந்தாலும், திறமையானவர்கள் முயன்றால், நிச்சயம் முடியும். அதற்கான சூழ்நிலை மெல்ல உருவாகித்தான் வருகிறது. விரைவில் இந்திய கூகிலில் சந்திப்போம்.

 3. இரத்தினவேலு சொல்கிறார்:

  கண்ணன்,
  பதிலுக்கு மிகவும் ந்ன்றி. ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ளுகிறேன் என்பது முழுக்க மெய்யே.

  நான் கவனமாக பெரும்பான்மை என்று எழுதிஉள்ளேன் தப்பிக்க அன்று!!
  நானே இந்தியாவை விட்டு — ஏன் தமிழ்நாட்டை விட்டு வெளியே போகாமல் என் தலைமையில் 2 ஆண்டுகள் உழைத்து10 த்மிழ் 4 மலயாள ஒரு மஹாரஷ்ட்ர பய்யன்களைக்கொண்டு internet security software bill gates செய்து உலக அளவில் நடந்த போட்டியில் வென்றோம்.அந்தப்பரிசு கலிfஓர்னியாவில் Bill Gates கைப்படத்தரப்பட்டது.
  இந்தக் குழுவில் 2 பேர் தவிர மற்றவர்கள் சித்தாள்கள் தாம். வெளி நாட்டில் பெரும்பாலும் நாம் செய்யும் வேலை அப்படியே. நிறுவனங்களும் அவ்வாறே.
  ‘முதல்’ நூல் இல்லை.

  வழி நூலும் இல்லை அச்சுக்கோர்த்து மெய்ப்பு பார்ப்பது போலத்தான். நிச்சயம் மிகச்சிலர் உளர்.
  என் மகள் இந்தியாவில் ஒரு நாள் கூடக் கல்லூரி செல்லவில்லை மாறாக correspondece B.Sc. Mathematics ப்டித்து விட்டு நான வீட்டில் சொல்லித்தந்ததைக் கொண்டு இன்று அமெரிக்காவில் புது மென்பொருள் பயன் படுத்தி வருகிறாள்.என் மாணாக்கர்கள் பலர் வெளி னாடுகளில் கோடிக்கணக்கான உரூ மதிப்புள்ள நிறுவனங்களுக்கு உரிமையாளர்களாய் உள்ளனர். அவையும் அவ்வாறே.

  மற்றும் தொழ்ல் நுணுக்க அறிவு கிடையாது என்று சொல்லி இருக்கிறேன் அடையமுடியாதவர்கள் என்று சொல்ல்வில்லை. இப்போதைக்கு மாறாது என்று சொல்லி இருக்கிறேன் மாற்றவே முடியாது என்றல்ல.

  ஆனால் நீங்கள் நினைப்பது போல் ‘ மெல்ல அதற்கான சூழ்நிலை’ உருவாகிக்கொண்டு வரவில்லை;நண்பரே ‘அதற்கான சூழ்நிலை’ என்றால் என்ன?
  அதைப்பற்றித் தெளிவு கொள்ள வேண்டும்;அதற்கு ஆழ்ந்த ,நேரடியான, இன்றைக்கான மென் , வன், தொழில் , தொழில்நுட்ப படிப்பு அறிவும், பட்டறிவும் வேண்டும்.
  உங்களுக்கு அவை இருக்குமெனில் மிக மகிழ்வுடன் நாம் இருவரும் -என் செலவில்- சென்னையிலோ தமிழ்நாட்டில் எங்காவதோ நாம் இருவரும் பேசலாம். இந்த வாக்கியத்தை நான் மிகுந்த பொறுப்புணர்வோடும் தங்களை எவ்வகையிலும் புண்படுத்திவிட்க்கூடது என்ற அச்சத்தோடும் எழுதுகிறேன் என்று உளமாரத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  அன்புடன்,
  இரத்தினவேலு

 4. kannan சொல்கிறார்:

  உங்கள் கருத்துகள் எவ்வகையிலும் புண்படுத்துமாறு இல்லை. நான் பெங்களூரில் உள்ளேன். சென்னை வரும்போது உங்களைத் தொடர்பு கொள்கிறேன். இந்தப் பதிவு நல்ல ஆக்கப்பூர்வமான ஒரு கருத்துப்பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி.

  தொழில்நுட்பத் துறையை இப்போது சார்ந்திருந்தாலும், நான் தொழில்நுட்ப வல்லுனன் எனக் கூறமுடியாது. என் திறன் நிர்வாகப்பணிகளில்.

  உங்கள் அனுபவம் தோய்ந்த மொழிக்கு மதிப்பு தருகிற அதே வேளையில், நல்ல நிறுவனம் நிறுவத் துணிவும், நிர்வாகத் திறனும், புதுமையான திட்டங்களும் அணுகுமுறையும் தான் முதல் தேவை என்று நம்புகிறேன். தொழில்நுட்ப வல்லுனர்களைப் பின் எப்படியும் ஈர்த்துவிட முடியும் அல்லது உருவாக்கிவிட முடியும். We need innovative ideas and intent; cutting edge technology will follow.

  எல்லாவற்றையும்விட துணிவு மிக அவசியம். நானே புது நிறுவனம் நிறுவும் முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் மீண்டும் மீண்டும் கைவிட்டு வருகிறேன். நல்ல வேலையில் நல்ல ஊதியம் பெறுகிற நிலையில் இருப்பதே ஒரு வகையில் தடையாக இருக்கிறது – அதனால் கிடைக்கிற வசதிகளை கொஞ்ச காலம் விட்டுத்தரத் துணிந்து, களத்தில் இறங்குவது கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது.

  ஆயினும் அந்தக் கனவு வலுத்துவருகிறது. ஓரிரு ஆண்டுகளுக்குள் செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

  புது நிறுவனங்கள் உருவாதற்கான ‘சூழ்நிலை’ என்று நான் குறிப்பிடுவது – ‘Venture Capital’ நிறுவனங்களின் வளர்ச்சி, அரசாங்க இடையூறுகளின் கனிசமான குறைச்சல், இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் விளைவாய் இங்கு உருவாகி வருகிற உள்நாட்டு வணிகவாய்ப்பு (அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை), எல்லாவற்றிற்கும் மேல் சிறுகச்சிறுகப் பெருகிவரும், இங்கு சாதிக்க முடியும் என்பதற்கான, முன்னுதாரணங்கள்.

  உதாரணமாய், Adventnet என்ற சென்னை சார்ந்த நிறுவனம் (கொஞ்சம் அமெரிக்கத் தொடர்பும் உண்டு) பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். Zoho என்கிற மென்பொருள் சார் இணைய தளம் நடத்துகிறார்கள். Microsoft Office, Google Documents ஆகயவற்றிற்கு எவ்வகையிலும் குறைந்ததாய்உத் தெரியவில்லை. இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக உருவாக, அவைகளின் வெற்றி என்னைப் போன்றவர்களுக்கு முன்மாதிரியாய் அமைந்து நம்பிக்கையூட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: