இலங்கைக் கலவரங்கள் பற்றிய புத்தகம் Michael Ondatjeவின் Anil’s Ghost. இலங்கை பற்றிய நடுநிலையான பார்வையுடன், இலங்கையோடு நேரடித் தொடர்பில்லாத ஒரு மூன்றாம் மனிதனால் எழுதப்பட்ட புதினம்.
வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காண்பிக்கிறது. உயிர்ச் சேதம் ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்கப் போவதில்லை. சிந்துவது சிங்கள ரத்தமாயினும், தமிழ் ரத்தமாயினும் விளைவு ஒன்றுதான் – இன்னும் சில சடலங்கள், தீர்வைவிட்டு இன்னும் கொஞ்சம் விலகல்.
நாவலில் எனக்குப்பிடித்த வரிகள் – ‘அமெரிக்கத் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், இறுதியில் நாயகன், நிறைய சண்டைக்காட்சிகளுக்குப் பின், வியட்னாம் மாதிரியான நாட்டிலிருந்து, நிம்மதியாய் விமானத்தில் பறந்து செல்வான். அவனைப் பொருத்தவரை, வாசகர்களைப் பொருத்தவரை, கதை சுபமாய் முடிந்தது. கீழே தொடர்ந்து கொண்டிருக்கும் போர்பற்றி எவருக்கும் கவலையில்லை.’
[…] நாங்கள் நிறுத்துகிறோம் என்கிற பழைய வாதம், அகிம்சையின் வெற்றியை […]