போதுமே இந்தப் போர்கள்…

தீவிரவாதம்தான் உரிமைப்பிரச்சனைகளுக்குத் தீர்வு என்கிற எண்ணம் எப்போது மாறும்? என்றைக்கும்விட இன்றைக்கு, முற்றிலுமாக இணைக்கப்பட்ட உலகில், அகிம்சைப் போராட்டம் வலிமையானதாகிவிட்டது. அமைதிப்போரின் நிலையான வெற்றிகளை நிறையப் பார்த்துவிட்டோம். வன்முறையால் கிடைக்கிற வெற்றிகள் வெறும் தற்காலத் தீர்வுகளையே தரமுடிந்திருப்பதையும் பார்த்துவிட்டோம்.

ஆயுதங்கள் ஏற்படுத்துகிற காயங்கள் ஆறுவதேயில்லை; வன்முறையால் கிடைத்த வெற்றிக்குப் பின்னும், வெவ்வேறு வடிவங்களில் வன்முறை வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் திடமான நியாயத்தின் அடிப்படையில் தொடரப்படுகிற அமைதிப்போரால் எவ்வளவு பெரிய எதிரியையும் வீழ்த்திவிட முடியும். வீழ்த்தியபின் எதிரியோடு நிரந்தரமாய் உறவாடவும் முடியும்.

இணையதளமும் நேரடித் தொலைக்காட்சிகளும் இல்லாத காலத்திலேயே காந்தியால் ஓர் அமைதிப்போர் தொடர முடிந்திருக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் வன்முறையைக் கைவிட்டு ஒரு பரவலான அமைதிப்போர் வெடித்தால், இந்தியாவால் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும். இன்று இந்திய மக்களில் எத்தனைபேர் காஷ்மீர் பக்கம் நியாயம் இருப்பதாய் நினைக்கிறார்கள்? இந்நிலை மாறும் வரை எத்தனை குண்டுகள் வெடித்தாலும் இந்தியா காஷ்மீர் மீதான உரிமையை விட்டுவிடப் போவதில்லை.

இலங்கையிலும் இதே நிலைதான் என்று தோன்றுகிறது. தொடரும் வன்முறையால் நியாயம் யார்பக்கம் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏற்கனவே தேவையற்ற ராஜீவ் படுகொலையால் பெருவாரியான இந்தியத் தமிழர்களின் ஆதரவை இழந்துவிட்டது இந்தப் போராட்டம். இன்னும் தொடரும் வன்முறை இலங்கைத் தமிழர்களை உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்தும். கண்ணெதிரே தெரியும் வன்முறை முன்னால், நியாமான உண்மைகள் கூட புதைந்துபோகும்.

போர்தொடுப்பதைவிட, தொடங்கிய போரை நிறத்துவதற்கும், போரின் போக்கை வேறுவிதமாய் திருப்புவதற்கும் அதிக துணிவும், அரசியல் திறனும் தேவை. கடினமான பாதைதான். ஆனால் நிரந்தனமான ஒரு தீர்வுகிட்ட இப்பாதையில் நடந்துதான் ஆகவேண்டும்.

2 Responses to போதுமே இந்தப் போர்கள்…

  1. […] As long, as the Kashmiris were fighting with weapons, it was easy for us to write them off as terrorists. Not any more. They have started also seeing the power of non-violence. Thousands of people engaging in peaceful protests can do wonders to influence the collective conscience of a country.  […]

  2. […] விடுதலைப் புலிகள் தம் இரக்கமற்ற வன்முறையைக் கைவிடும்வரை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் கருதப்படுவார்கள்; கருதப்படவேண்டும். சிங்கள அரசு வன்முறையை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிற பழைய வாதம், அகிம்சையின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய இந்த மண்ணில் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; கூடாது.   நிலையான தீர்வு ஒருகாலும் தீவிரவாதத்தால் பெற முடியாது.  […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: