பாரதியின் கவிதைகளை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். மொழிபெயர்த்த கவிதைகளுக்கான இணைப்புகளை இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை மொழிபெயர்க்கும் போதும், அது எவ்வளவு கடினமான செயல் என்பதை உணர்கிறேன். அவனுடைய கவித்துவத்தை, நம் உள்ளங்களோடு உரையாடும் அவனுடைய மொழியின் அந்தரங்கத்தை, எழுச்சியூட்டும் இசைத்தன்மையை, வெல்லும் சொல் பிறிதொன்றில்லாத் தனித்துவத்தை ஆங்கில மொழியில் அடைப்பதென்பது நினைத்துப்பார்க்க முடியாததுதான். வேற்றுமொழியினர் அவனைப் போற்றினாலும், போற்றாவிடினும் அவன் தமிழர்க்கு மகாகவிதான். ஆயினும், மற்றவர்களுக்கு பாரதியைக் கொஞ்சமேனும் அடையாளம் காட்ட என்னாலியன்ற முயற்சியிது. அவன் கவிதைக்குள் ஆழமாய்ச் செல்லும் வாயப்பும்கூடத்தான்.
Crafting Bharathi’s veena – நல்லதோர் வீணைசெய்தே
Challenging the God – தேடிச்சோறு நிதந்தின்று
The fire-ling – அஃகினிக் குஞ்சொன்று கண்டேன்
A tiny tract of land – காணி நிலம் வேண்டும்
Ecstasy – காக்கை குருவி எங்கள் ஜாதி
Light and darkness – வானமெங்கும் பரிதியின் சோதி
The day has dawned – பொழுது புலர்ந்தது
I have no fear – அச்சமில்லை அச்சமில்லை
பாரதி பற்றிய மற்ற கட்டுரைகள்:
Yadugiri’s biography of Bharathi