சிறைக்கூடங்களைத்தான்
எத்தனை திடமான கற்களாலும்
கனமான கம்பிகளாலும் கட்டிவிடுவிடுகிறார்கள்.
ஆனாலும் கொஞ்சம் வெளியுலகைத் தாங்கிக்கொண்டு
உள்ளே நுழைந்துவிடுகிறது காற்று.
குளிரூட்டப்பட்ட கான்க்ரீட் கோபுரங்களில்
அத்தகு மீறல்களுக்கு வாய்ப்பில்லை.
உயர் பதிவிக்கு அடையாளமாய்ப்
பரிசின் போர்வையில்
தனியறை.
கண்ணாடிச் சிறை.
வெளியேற முடியாமல்
காற்றும் நானும்.
வெளியில் அடைமழை.
கைபேசியில் அழைத்த
மனைவி சொன்னாள்.