பழைய பேப்பர் சில மாதங்களாய் அவனிடம்தான் போடுகிறோம். பதினைந்து வயதிருக்கும். இரு மாத பேப்பர் அவன் தராசில் எடைகூடுதலாய்த் தெரியும்.
அன்று, மேஜை மீதிருந்த கிழிந்த பாரதி புத்தகத்தைக் கேட்டான்.
‘அது எடைக்கில்லப்பா’.
‘இல்ல சார், என் தம்பி ஸ்கூல்ல படிக்கறான். அவனுக்குப் பேச்சுப்போட்டிக்கு நான்தான் எழுதித்தருவேன். பாரதியார் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும. நான் வேணாக் காசு தரேன் சார்’
மகிழ்ந்துபோய், வீட்டுக்குள்ளிருந்த இன்னொரு பாரதி புத்தகம் தந்தேன்.
புதிதாய் வாங்கியது.
‘காசெல்லாம் வேண்டாம்பா. எடைக்குப் போட்டுற மாட்டியே?’
‘அதெப்படி சார்? பாரதியாரப் போய் எடைக்குப் போடுவனா?’
நல்ல பதிவு. பாராட்டுகள்.