நான் பயணித்த பாதை நெடுந்தூரமானது! நெடுநாள் எடுத்தது!
காலையின் முதல் ஒளி துளித்த போது, என் தேரில் கிளம்பினேன். பல உலகங்களில் பயணித்தேன், பல கிரகங்களில், விண்மீன்களில் என் காலடி பதித்தேன்.
ஒரு நெடுந்தூரப் பயணம்தான் உன்னை உனக்கு மிகமிக அருகே அழைத்து வருவது! கடும் பயிற்சிதானே ஓர் எளிய ராகத்திற்கு உன்னை வழிநடத்திச்செல்கிறது?
ஒரு பயணி ஒவ்வொரு அந்நியக் கதவையும் தட்ட வேண்டியிருக்கிறது; அகிலமெங்கும், ஆகாயமெங்கும் அலைந்தபின் தான், இறுதியில், உள்ளிருக்கும் கோயிலை அடைய முடிகிறது.
என் விழிகள் வான்வெளியெங்கும் தேடியபின், இமைமூடினேன். பின் கூறினேன், ‘ஓ! இங்கே இருக்கிறாயா நீ!’
‘எங்கே?’ என்கிற கேள்வியும் கூச்சலும் ஆயிரம் கண்ணீர் ஓடைகளாய் உருகி உலகைச் சூழ்ந்தன, ‘நானே’ என்கிற உறுதி வெள்ளத்தில்!
- தாகூர் எழுதியதாய் நான் புரிந்து எழுதியது (my interpretation of a verse in Gitanjali)!
2:34 பிற்பகல் இல் அக்டோபர் 7, 2008 |
[...] தாகூரைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் போது தோன்றியது, ஏன் [...]