விடு! ஜபித்தலையும், ஓதுதலையும், ருத்ராட்சம் உருட்டுதலையும் விட்டுவிடு!
தனிமையில், கோயிலின் இருண்ட மூலையில், கதவுகளை அடைத்துக் கொண்டு, யாரை வணங்கிக் கொண்டிருக்கிறாய்?
திற விழி! உன் கடவுள் உன் முன்னே இல்லை என்பதை அறி!
எங்கே, அந்த உழவன் கடும் நிலத்தைப் பிளந்து உழுதுகொண்டிருக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.
எங்கே, அந்த ஏழை கற்களை உடைத்துச் சாலை அமைக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.
அவர்களோடு வெயிலில் காய்கிறான், மழையில் நனைகிறான்; அவனது உடை கிழிந்து, புழுதி படிந்துகிடக்கிறது.
உன் காவி உடைகளைக் களைந்து, அவனைப்போல் நீயும், புழுதியில் இறங்கி வா!
முக்தியா? மோட்சமா? எங்கே கிடைக்கும் அந்த மோட்சம்? நம் கடவுளே, ஆனந்தமாய் ஆக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான்; அதன் மூலம் நம்மோடு பிணைந்திருக்கிறான்!
3:47 பிற்பகல் இல் அக்டோபர் 6, 2008 |
நண்பர்களே,
நான் எழுதியுள்ள தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலியும் படித்துப் பாருங்கள்.
நெஞ்சின் அலைகள் http://jayabarathan.wordpress.com/
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
4:29 பிற்பகல் இல் அக்டோபர் 6, 2008 |
என்னுடைய முயற்சி, என்னை மிகவும் கவர்ந்த சில வரிகளைப் பதிவு செய்வதுதான்.
உங்கள் முயற்சி முழுமையாய் உள்ளது; it is truer to the (English) original in form and content. நன்றி!