எங்கே மனதில் அச்சமில்லையோ, தலை நிமிர்ந்துள்ளதோ,
எங்கே கலைச்செல்வங்கள் கட்டற்றுக் கிடக்கின்றனவோ,
எங்கே குறுகிய சுவர்களால் சமுதாயம் சிதைக்கப்படாமல் உள்ளதோ,
எங்கே வாய்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் பிறக்கின்றனவோ,
எங்கே விடாமுயற்சி தன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டுகின்றதோ,
எங்கே பழம்பழக்கம் என்கிற பாழும் பாலைவனப்புழுதியில் காணாமற்போகாமல், தெள்ளிய நீரோடையான பகுத்தறிவு பாய்கிறதோ,
எங்கே விரிந்த சிந்தனையும், செயல்வேகமும் கொண்டு மனம் முன்னே நடத்தப்படுகிறதோ,
அங்கே, எந்தையே, அந்தச் சுதந்திர சொர்க்கத்தில், என் நாடு விழிக்கட்டும்.
- தாகூர்
(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)