பல்லாண்டுகளுக்கு முன் கல்லூரியில் இருந்த காலத்தில் முரசு அஞ்சல் பயன்படுத்தி இருக்கிறேன். Romanised விசை அமைப்பு முறை. அவ்வளவு கடினமாக இருந்தமாதிரி நினைவில்லை. இப்போது முதன்முறையாய் தமிழ்99 முறையில் முயன்றுபார்க்கிறேன்.
என்ன எழுதுவது என்பதைவிட எப்படி எழுதுவது என்பதுதான் இப்போதைக்கு என் எண்ணங்களை நிரப்பியுள்ளது. நிறையவே தடுமாறுகிறேன். இன்னும் கொஞ்சம் முயன்றபின் முடிவு செய்யவேண்டும், முடியுமா எனபதை.